• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹன்சிகா புகைப்பிடிக்கும் போஸ்டர் - படத்தின் இயக்குநர் விளக்கம்

ஹன்சிகா புகைப்பிடிக்கும் போஸ்டர் - படத்தின் இயக்குநர் விளக்கம்

ஹன்ஷிகாவின் மஹா பட போஸ்டர்

ஹன்ஷிகாவின் மஹா பட போஸ்டர்

ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து படத்தின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து படத்தின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

    நடிகை ஹன்ஷிகா நடிக்கும் 50-வது படமாக உருவாகியுள்ளது மஹா. இந்தப் படத்தை இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் ஹன்ஷிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது. இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தப் புகைப்படத்தை எதிர்த்து பா.ம.க பிரமுகர், படத்தின் இயக்குநர் மற்றும் ஹன்ஷிகா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனது விளக்கத்தை படத்தின் இயக்குநர் ஜமீல் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதைவிட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் இதை அணுக வேண்டாம்” என்று கூறியுள்ளார்.



    இணையத்தில் வைரலாகும் கிரண்பேடியின் குறும்படம் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: