ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரிய நடிகர்கள் தீர்வுகாண முன்வர வேண்டும் - இயக்குநர் தங்கர் பச்சான்!

இயக்குநர் தங்கர் பச்சான்

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு நாள் மட்டும் இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு கருத்து தெரிவிக்காமல், ஒரு நிரந்த தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இயக்குநர் தங்கர் பச்சான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தான் சினிமாவில் இருந்து வந்ததாகவும் என்னுடைய சினிமா வாழ்க்கையை சிலர் அவதூறு செய்வதற்காக கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்து வருவதாகவும் அப்போதே அவர்களுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தான் கருத்து தெரிவித்ததாகவும், தான் தெரிவித்த கருத்தை திரித்து அந்த தனியார் தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி அவதூறு பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

தன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் நேரில் சந்தித்து புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Also read... சூர்யாவுக்கு ஆதரவா யாரும் இல்லையா- ரஜினி, விஜய், அஜித் எங்கே? இயக்குநர் அமீர் கேள்வி!

பெரிய நடிகர்கள் (ரஜினி, கமல்) யாரும் இந்த சட்டத்திற்கு கருத்து தெரிவிக்கவில்லையே என்ற செய்தியார்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் தங்கர்பச்சான், அவர்கள் விண்ணுலகத்தில் இல்லை. அவர்களுக்கு நடப்பது தெரியும். அவர்களிடம் ஊடகம் கேள்வி கேட்கட்டும் என்றார்.

மேலும் பேசிய அவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு நாள் மட்டும் இந்த சட்டத்துக்கு கருத்து தெரிவிக்காமல், ஒரு நிரந்த தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற வேண்டும் எனவும் அப்போது தான் சினிமாவின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படாமல் இருப்பதை தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: