இயக்குநர் தருண்கோபி இயக்கத்தில் உருவாகும் ‘யானை’

இயக்குநர் தருண்கோபி இயக்கத்தில் உருவாகும் ‘யானை’

இயக்குநர் தருண் கோபி

இயக்குநர் தருண் கோபி அடுத்ததாக ‘யானை’ என்ற படத்தை இயக்குகிறார்.

  • Share this:
விஷால், ஸ்ரேயா ரெட்டி, ரீமா சென் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘திமிரு’ படத்தை இயக்கியவர் தருண் கோபி. தொடர்ந்து சிம்புவின் ‘காளை’ படத்தை இயக்கிய இவர் ‘திமிரு’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘வெறி’ என்ற தலைப்பில் இயக்கினார்.

ஒரு பக்கம் படங்களை இயக்கிய தருண் கோபி, மற்றொரு பக்கம் ராசுமதுரவன் இயக்கத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ கன்னியும் காளையும் செம காதல், திமிரு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் இவர் இயக்கத்தில் உருவான ‘அருவா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் சென்டிமென்ட் கலந்த ‘யானை’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை ஆரூத் ஃபிலிம் பேக்டரி மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பில் யானை பலம் பொருந்திய முன்னனி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகை, நடிகர்கள், நடிக்கவுள்ளனர்.

‘யானை’ படம் குறித்து இயக்குநர் தருண்கோபி கூறுகையில், “ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாக போக வேண்டும். அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். என்ற மையக்கருத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக, ஆக்‌ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதை, மக்கள் அன்றாட சந்திக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கவுள்ளேன்.

மேலும் படிக்க: ‘அருவா சண்ட’ படத்துக்கு டப்பிங் பேசும்போது கண் கலங்கினேன்' - சரண்யா பொன்வண்ணன்

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது” என்றார் இயக்குநர் தருண் கோபி.
Published by:Sheik Hanifah
First published: