முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உழைப்பாளர் தினத்துக்கு உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் - இயக்குநர் சுசீந்திரன்

உழைப்பாளர் தினத்துக்கு உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் - இயக்குநர் சுசீந்திரன்

அஜித்குமார்

அஜித்குமார்

ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பு இருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல்.

  • Last Updated :

உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று இயக்குநர் சுசீந்திரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் அஜித். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இவருடைய பலம். ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பு இருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல்.

நடிப்பைத் தாண்டி விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் அஜித். அவருக்கு இன்று 49-வது பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருடைய ரசிகர்கள் #HappyBirthdayThala என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவிள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநர் சுசீந்திரன் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்த அஜித் அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க என் வேண்டுதல்கள்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக பொங்களன்று வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

Also watch

First published:

Tags: Actor Ajith, Ajithkumar, Director suseenthiran, Nerkonda Paarvai