பாரதிராஜா- சசிகுமாரை இயக்கும் சுசீந்திரனின் அடுத்த பட அறிவிப்பு
பாரதிராஜா- சசிகுமாரை இயக்கும் சுசீந்திரனின் அடுத்த பட அறிவிப்பு
இயக்குநர் சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிக்கின்றனர். படத்திற்கு கென்னடி கிளப் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 -ம் தேதி வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப்“ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சௌமியா, ஸிம்ரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்துக்காக பாலிவுட் வில்லனை சுசீந்திரன் தேடிவருகிறார்.
பாண்டியநாடு, பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு படத்துக்கு பின் டி.இமான், இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் படத்தை தயாரிக்கிறார்.
பழனியைக் கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது. இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். படத்தில் நிஜ கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.