முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

விபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன்

  • Last Updated :

காலை நடைபயிற்சி சென்ற இயக்குநர் சுசீந்திரன் மீது வாகனம் மோதியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமரபூண்டி கிராமத்தில் பிறந்தவர் சுசீந்திரன். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா, மாவீரன் கிட்டு, பாண்டிய நாடு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக சாம்பியன் திரைப்படம் வெளியானது.

இதையடுத்து தனது அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தி வந்த சுசீந்திரன், அதற்காக சமூகவலைத்தள பக்கங்களில் இருந்தும் வெளியேறினார். இந்நிலையில் இன்று காலை வாக்கிங் சென்ற அவர் மீது வாகனம் ஒன்று மோதியது. அதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழ, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் அதற்காக கட்டு போடப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தொடர்ந்து 3 வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வலியுறுத்தியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பு

top videos

    First published:

    Tags: Director suseenthiran