முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எப்போது பஞ்சாயத்து முடியும்? காமெடிப் புயலுக்காக காத்திருக்கும் இயக்குநர்

எப்போது பஞ்சாயத்து முடியும்? காமெடிப் புயலுக்காக காத்திருக்கும் இயக்குநர்

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க தயார் நிலையில் இருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் வடிவேலு தொடர்பான பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் தீராததால் அவரை வைத்து இயக்க இருந்த சுராஜ், படத்தை தொடங்க முடியாமல் காத்திருக்கிறார்.

பேஸ்புக் & ட்விட்டர் யுகத்திலும் மீம்ஸ்கள் வாயிலாக காமெடி கிங் வடிவேலு டாப்பில் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும் படி அவருக்கு படங்கள் ஹிட் அடிக்கவில்லை. வெளியான சில படங்களும் தோல்வியடைந்தது.

இதற்கிடையே, சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகி பட்டைய கிளப்பிய ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இது வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

எனினும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இது தொடர்பாக வடிவேலு எந்த விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம்.

இதன் காரணமாக வடிவேலுவிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் இந்த பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். முக்கியமாக இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.

விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் சுராஜ் காத்துக் கொண்டிருக்கிறார்.

சுராஜ் ஏற்கனவே மருதமலை உள்ளிட்ட சில படங்களில் வடிவேலுவை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See..

First published:

Tags: Actor Vadivelu