Home /News /entertainment /

அடுத்த படத்தில் ரஜினியா... கமலா...? இயக்குநர் ராஜமவுலி பதில்

அடுத்த படத்தில் ரஜினியா... கமலா...? இயக்குநர் ராஜமவுலி பதில்

தற்போது, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து படம் இயக்கி வரும் ராஜமவுலி, அடுத்த படம் குறித்த கதை தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

  • News18
  • Last Updated :
இந்திய அளவில் முன்னணி இயக்குநராக அறியப்படும் இயக்குநர் ராஜமவுலி, தனது அடுத்த படத்தில் கதாநாயகனாக யாரை தேர்வு செய்வேன் என்று பதிலளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இருந்து தேசிய அளவில் புகழ் பெற்ற இயக்குநர் ராஜமவுலி, இவர் இயக்கிய மற்ற படங்கள் அனைத்தும் ஹிட் அடித்த நிலையில், பாகுபலி இரண்டு பாகங்களும் மெகா ஹிட் அடித்தன. உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தப்படங்கள் வசூலைக் குவித்தது.

தற்போது, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து படம் இயக்கி வரும் ராஜமவுலி, அடுத்த படம் குறித்த கதை தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம் நீங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் உங்கள் தேர்வு ரஜினியா இல்லை கமலா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ராஜமவுலி “நான் ரஜினியை வைத்துதான் படம் இயக்குவேன். நான் அவருடன் இணையும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்கள் விசில் பறக்கும்” என்று பதில் அளித்துள்ளார். இதனால், ரஜினிகாந்த் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Rajamouli

அடுத்த செய்தி