பிரியா பவானி சங்கர் மிரட்டிக் கேட்டார்... மீம்ஸ் போட்ட இயக்குநர்!

நடிகை பிரியா பவானி சங்கர்

  • Share this:
    பிரியா பவானி சங்கருக்காக இயக்குநர் ஸ்ரீகணேஷ் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    8 தோட்டாக்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீகணேஷ். இவர் தற்போது குருதி ஆட்டம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். மீம்ஸ்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வரும் இயக்குநர் ஸ்ரீகணேஷிடம் தனக்காக ஒரு மீம்ஸ் போடச் சொல்லி பிரியா பவானி சங்கர் மிரட்டியதால் அவருக்காக மீம்ஸ் பதிவிடப்பட்டிருப்பதாகக் கூறி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீகணேஷ் பதிவிட்டிருக்கிறார்.

    அந்த பதிவில் ரஜினிகாந்தின் பாட்ஷா படக்காட்சி மீம்ஸாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாஃபியா திரைப்படத்துக்கும் அப்பதிவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகணேஷின் இந்த மீம்ஸ் பதிவு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல நகைச்சுவையான மீம்ஸ்களை ஸ்ரீகணேஷ் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



    யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் குருதி ஆட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: Exclusive | சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்கும் விஜய் - அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

     
    Published by:Sheik Hanifah
    First published: