• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'சினிமாவில் ஒரு இலக்கியப் படைப்பு'...பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ஷங்கர்

'சினிமாவில் ஒரு இலக்கியப் படைப்பு'...பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ஷங்கர்

ஷங்கர், பரியேறும் பெருமாள் பட போஸ்டர்

ஷங்கர், பரியேறும் பெருமாள் பட போஸ்டர்

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், 'சினிமாவில் ஒரு இலக்கியப் படைப்பு' என நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

    இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பரியேறும் பெருமாள் சினிமாவில் ஒரு இலக்கியம் போல அமைந்துள்ளது. ஆழமாக பாதிக்கும்படி இருந்தது. யோசிக்க வைத்தது. படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் கொலைகாரர் கதாபாத்திரம் பயங்கரமாக இருந்தது. ஜோ கதாபாத்திரம் தேவையான இடங்களில் மென்மையாக, மிகச் சிறப்பாக இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பு” என்று கூறியுள்ளார்.



    Also Watch:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: