எனக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதா? - ஷங்கர் விளக்கம்

எனக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதா? - ஷங்கர் விளக்கம்

இயக்குநர் ஷங்கர்

தன்னை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

 • Share this:
  எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகாத, இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது என நேற்றைய முன் தினம் ஊடகங்களில் செய்தி வெளியானது.

  அது பொய்யான செய்தி எனக் கூறி அறிக்கை மூலம் விளக்கமளித்து இயக்குநர் ஷங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தை அணுகி இந்த செய்தி குறித்து நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். எனக்கு எதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.

  இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.

  இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலை தந்துள்ளது.” இவ்வாறு தனது அறிக்கையில் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: