இயக்குநர் ஷங்கரின் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
உதகையில் கடும் உறை பனி: -2 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தால் மக்கள் அவதி
இதற்கிடையே தேர்தல் நெருங்கி வருவதால், அதில் பிஸியான கமல், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் நடிப்பைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கமலுக்கும் லைகா நிறுவனத்தும் இடையே பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷங்கரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் அந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இயக்குகிறார். இதனை ஷங்கர் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படம் 2022-ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்