ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புது படத்தில் இத்தனை மாற்றங்களா?

ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புது படத்தில் இத்தனை மாற்றங்களா?

 முதல்முறையாக ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.

முதல்முறையாக ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.

முதல்முறையாக ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.

  • 1 minute read
  • Last Updated :

ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படவேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஷங்கரிடம் நிறைய மாற்றங்கள். பொதுவாக அவரது படங்களுக்கு ரஹ்மான் இசையமைப்பார். அவரது கால்ஷீட் கிடைக்காதபட்சத்தில் அந்நியன், நண்பன் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இவர்கள் இருவர் தவிர வேறு யார் இசையையும் ஷங்கர் பயன்படுத்தியதில்லை. முதல்முறையாக ராம் சரண் படத்துக்கு தமனை இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.

இன்னொரு விஷயம் பட்ஜெட். தனது படங்களின் பட்ஜெட்டை குத்துமதிப்பாக சொல்வதே ஷங்கரின் வழக்கம். சொல்வதைவிட அதிகமாகவே எப்போதும் ஆகும் என்பதால், தயாரிப்பாளர் ஏமாற்றமடையாமல் இருக்க இந்த ஏற்பாடு. ஆனால், இந்தப் படத்துக்கு துல்லியமாக பட்ஜெட் போட்டு தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கொடுத்துள்ளார். பட்ஜெட் 170 கோடிகள் என்கிறார்கள் தெலுங்குப் படவுலகில்.

கூலிங் கிளாஸுடன் கெத்தா போஸ் கொடுக்கும் சீரியல் நடிகை ரச்சிதா..

அதேபோல் எப்போது படம் முடியும் என்பதையும் கூறுவதில்லை. படத்தை ஆரம்பிக்கும் போதே வெளியீட்டு தேதியை அறிவிப்பவர்கள் ஏவிஎம் நிறுவனத்தார். அவர்கள் சிவாஜி படத்தை தயாரித்த போதும், எப்போது படப்பிடிப்பு முடியும் என்பதை ஷங்கர் கூறவில்லை. மாறாக ராம் சரண் படத்தை இத்தனை மாதங்களில் முடித்துத் தருவதாக கூறியுள்ளார். இந்த வரிசையில் முக்கியமான இன்னொரு மாற்றம் எடிட்டர்.

அமீரின் முத்தத்தால் பாவ்னிக்கு வந்த சிக்கல்.. சர்ச்சைக்கு முடிவு கட்ட நினைக்கும் ரசிகர்கள்!

எடிட்டர் ஆண்டனியை தவிர்த்து மலையாளத்தின் முன்னணி எடிட்டர் சமீர் முகமதுவை ராம் சரண் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். நேற்று இல்லாத இந்த மாற்றங்கள் நல்விளைவுகளை தரட்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: