இயக்குநர் ஷங்கர் தற்போது வரலாற்று சிறப்பம்சம் மிகுந்த கதையில் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ’பாகுபலி’ படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியடைந்ததிலிருந்து, பல இயக்குநர்கள் வரலாற்றுப் படங்களில் தாங்களும் ஜொலிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த படமும் பிரபாஸ் மற்றும் ராணா நடித்த பாகுபலி படத்திற்கு இணையான வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்திற்காக, நான்கு தென்னிந்திய ஹீரோக்களை டிக் செய்ய, இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசனுடன் ஷங்கர் இரண்டாவது முறை இணைந்திருக்கும் இந்தியன் 2 படத்தின் 60% படப்பிடிப்பு முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட நடிகர்களும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு, முழு நீண்ட அட்டவணையில் கமல் நடிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்