ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

KS Sethumadhavan: கே.எஸ்.சேதுமாதவன் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

KS Sethumadhavan: கே.எஸ்.சேதுமாதவன் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

தமிழில் நம்மவர், மறுபக்கம், நிஜங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் நம்மவர், மறுபக்கம், நிஜங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் நம்மவர், மறுபக்கம், நிஜங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

 • 1 minute read
 • Last Updated :

  இந்திய சினிமாவின் முன்னோடி என்று அழைக்கப்பட்ட இயக்குனர் சேதுமாதவன் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

  மலையாள திரையுலகில் புதுமைகள் புகுத்திய பிதாமகன் என கொண்டாடப்படும் இயக்குனர் சேதுமாதவன் அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ள சேதுமாதவன், தமிழில் நம்மவர், மறுபக்கம், நிஜங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

  மறுபக்கம் திரைப்படத்திற்காக தேசிய அளவில் வழங்கப்படும் தங்கத்தாமரை விருதை வென்றுள்ள சேதுமாதவன் ஒன்பது கேரளத்தின் மாநில விருதுகளையும், 10 தேசிய விருதுகளையும் சிறந்த இயக்குனர் பிரிவில் வென்றுள்ளார். 10 தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சேதுமாதவன் சென்னையிலுள்ள ரைட்டர்ஸ் காலனியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

  அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவகுமார் தயாரிப்பாளர் குஞ்சுமோன் உள்ளிட்ட பலரும் இன்று காலையிலேயே இயக்குனர் சேதுமாதவன் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: