ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'தனியாக வந்தோம். துணை என்பது கானல் நீர்' - செல்வராகவனின் திடீர் தத்துவ பதிவு

'தனியாக வந்தோம். துணை என்பது கானல் நீர்' - செல்வராகவனின் திடீர் தத்துவ பதிவு

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவனின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.

இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநராக கலக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். செல்வராகவனுக்கு திரையில் எப்படி ரசிகர்கள் உண்டோ அதேபோல் அவரின் தத்துவ ட்வீட்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. திடீரென வந்து தத்துவத்த்தை தூவிவிட்டு சென்றுவிடுவார். இந்நிலையில் இன்று பதிவிட்டுள்ள ட்விட்டர் தத்துவத்தை ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவன் ‘தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராகவனின் இந்த ட்விட்டர் தத்துவத்தை குறிப்பிட்டு பதிலளித்துள்ள பலரும் ஜூனியஸ் சொல்வது உண்மைதான் என்றும், செல்வராகவனின் திடீர் தத்துவம் ஏன் என்றும் பதிவிட்டு வருகின்றனர்


First published:

Tags: Director selvaragavan