விஜய் பட பாடல் வரிகளை மிகவும் பிடித்தது எனக் கூறிய செல்வராகவன்

விஜய் பட பாடல் வரிகளை மிகவும் பிடித்தது எனக் கூறிய செல்வராகவன்

நடிகர் விஜய்

அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளை தனக்கு மிகவும் பாடல் வரிகள் எனக் குறிப்பிட்டு செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  விஜய் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன் திரைப்படம். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ என்ற பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவர் எந்த விழாவில் பங்கேற்றாலும் ‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே’ என்ற வாசகத்தை தவறாமல் சொல்லுவார். இந்த பாடலையும் தனது சொந்த குரலில் பாடி ரசிகர்களின் மனதில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்தார் என்று கூறலாம்.

  இந்த பாடலுக்கு கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘நான் கேட்ட இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் ..
  "எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..நீ நதி போல ஓடிக் கொண்டிரு" என்று கூறியுள்ளார்.

     புத்தாண்டை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் செல்வராகவன். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ல் தான் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். மேலும் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘சாணி காயிதம்’ என்ற படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: