• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'தனிமையே பேரின்பம்'.. சர்ச்சையை கிளப்பிய செல்வராகவன் ட்வீட்

'தனிமையே பேரின்பம்'.. சர்ச்சையை கிளப்பிய செல்வராகவன் ட்வீட்

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன் போட்ட ட்வீட் ஒன்று நெட்சன்கள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது.

  • Share this:
    துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற முக்கியமான திரைப்படங்களால் இன்றும் நினைக்கப்படுகிறவர் செல்வராகவன். கடைசியாக அவர் இயக்கிய படங்கள் பட்ஜெட்டை விழுங்கி தோல்வியை பரிசளித்தன. இதனால், பல வருடங்களாக படங்கள் இல்லாமல் இருக்கிறார். தனுஷ் கால்ஷீட் கொடுத்து கரைசேர்த்தால்தான் உண்டு என்கிற நிலை செல்வராகவனுக்கு.  

    இந்நிலையில் சாணிக்காயிதம் படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கிறார். தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. இனிமேல் செல்வராகவன் படங்கள் இயக்குவாரா என்பது தனுஷின் கையில் இருக்கிறது

    இப்படியொரு சூழலில், "இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒருபொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப்போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி" என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் வெளியான சில நிமிடங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை குவித்துவிட்டனர். கல்யாண உறவில் பிரச்சனையா? இல்லை சினிமாவில் தம்பியை நம்பியதை சொல்கிறாரா என ஏகப்பட்ட யூகங்கள்



    also read : லண்டனில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை..


    தனிமை பேரின்பம் என்றால் அதை ஏன் அவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தத்துவமா நினைச்சு ரசித்துவிட்டு போகலாமே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: