• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆயிரத்தில் ஒருவன் 2 - ஆசையை வெளிப்படையாகச் சொல்லிய செல்வராகவன்!

ஆயிரத்தில் ஒருவன் 2 - ஆசையை வெளிப்படையாகச் சொல்லிய செல்வராகவன்!

’ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பது தான் எனது தீராத ஆசை என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
    `ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பது தான் எனது தீராத ஆசை என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். 

    இயக்குநர் செல்வராகவன் தற்போது சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தை இயக்கி வருகிறார். ஆனால் அவரது திரைத்துறை வாழ்க்கையில் இரண்டு படங்களுக்கு இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதில் முதலிடத்திடத்தில் இருப்பது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம். 2-வது இடத்தில் இருப்பது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’.

    சமீப காலமாக ட்விட்டரில் ஆக்டிவ்வாக செயல்பட்டுவரும் செல்வராகவனிடம், புதுப்பேட்டை படத்துக்காக காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், "காலம் வரும். கண்டிப்பாக நடக்கும்" என்று கூறியிருந்தார்.

    தற்போது சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

    இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என்று கூறியுள்ளார்.



    இதனால் என்.ஜி.கே படத்தை அடுத்து அவர் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்தை இயக்க இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடையை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ஆல் இன் ஆல் அரசியல் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: