பிரபல இயக்குநர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் திடீர் அனுமதி

மாதிரிப் படம்

கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் இயக்குநர் சஞ்சனா ரெட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் இயக்குநர் சஞ்சனா ரெட்டி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  2018-ம் ஆண்டு ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி அடுத்ததாக முன்னாள் பளு தூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்தநாளன்று வெளியானது.

  இந்நிலையில் நடிகை சஞ்சனா ரெட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

  சஞ்சனா ரெட்டி


  இதுகுறித்து கர்ணம் மல்லேஸ்வரி படத் தயாரிப்பாளர் கோனா வெங்கட் கூறுகையில், டயட் காரணமாக திரவ உணவுகளை மட்டுமே கடந்த 3 நாட்களாக சஞ்சனா ரெட்டி உணவாக உண்டு வந்தார். அதனால் அவர் வீட்டில் மயக்கமடைந்து விட்டார். கவலைப்பட ஒன்றுமில்லை. இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார். கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக் விரைவில் திட்டமிட்டபடி தொடங்கும்” என்றார்.

  ஆனால் சஞ்சனா ரெட்டியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், வெண்டிலேட்டர் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாகவும் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க: காதலருடன் முத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜாக்கி ஷெராஃப் மகள் - முகம் சுழித்த சகோதரர்


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sheik Hanifah
  First published: