‘தலைவி’ திரைப்படம் குறித்த சமுத்திரக்கனியின் பதிவு

‘தலைவி’ திரைப்படம் குறித்த சமுத்திரக்கனியின் பதிவு

தலைவி பட ஸ்டில்

‘தலைவி’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கங்கணா ரணாவத் ஜெயலலிதா கேரக்டரிலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்துக்காக கங்கனா ரணாவத் 22 கிலோ உடல் எடை அதிகரித்து பின் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். நேற்று ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு படத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா, இன்னும் ஒரு சில வாரங்களில் ‘தலைவி’ படத்தின் ஷூட்டிங்கை முடிக்க இயக்குநர் ஏ.எல்.விஜய் பணியாற்றி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தலைவி படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, “‘தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. மிக்க மகிழ்ச்சி. பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய், கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்,உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



படப்பிடிப்பை விரைவில் முடிக்கும் படக்குழு 2021-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: