Home /News /entertainment /

அரசியல் கட்சியினர் சென்சார் போர்டில் இருக்கக் கூடாது - ராஜுமுருகன் காட்டம்

அரசியல் கட்சியினர் சென்சார் போர்டில் இருக்கக் கூடாது - ராஜுமுருகன் காட்டம்

ராஜுமுருகன்

ராஜுமுருகன்

அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவில் இருக்கக் கூடாது என்று இயக்குநர் ராஜு முருகன் கூறியுள்ளார்.

ஜோக்கர் படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. ஜீவா நாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து தணிக்கைக்குச் சென்ற போது 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படத்துக்கு ‘A' சான்றிதழ் வழங்கப்பட்டது. தணிக்கையில் எழுந்த பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இத்திரைப்படம் வரும் 6-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இயக்குநர் ராஜு முருகன், “டெல்லியில் நடக்கக்கூடிய வன்முறைகள் ஜிப்ஸி திரைப்படம் வெளியாகும் நேரத்திற்கு ஒத்துப்போகிறது. மதம் என்பது அவரவர் விருப்பம். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களைத் தான் படத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை யூடியூபில் வெளியிட்டது குற்றமா என எனக்குத் தெரியாது. சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளையும் சேர்த்து முழுநீளத் திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடுவோம். இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவில் அரசியல் கட்சியைச் சார்ந்த நபர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எனது கோரிக்கை” என்றார்.

படம் குறித்து பேசிய நடிகர் ஜீவா, ராஜு முருகனின் வார்த்தைகள் தான் தன்னை ஜிப்ஸியில் நடிக்க வைத்ததாகக் கூறினார்.

மேலும் படிக்க: “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி“ - ஜிப்ஸி படத்தின் சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள்
Published by:Sheik Hanifah
First published:

Tags: Gypsy Film

அடுத்த செய்தி