மே - 20 ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

2022 கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மே 20 அதற்கான அறிவிப்பை தெலுங்கு திரையுலகம் எதிர்பார்க்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜுனியர் என்டிஆரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் மே 20 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிடுகிறார் இயக்குனர் ராஜமௌலி.

பாகுபலி சீரிஸுக்குப் பிறகு ராஜமௌலி இயக்கிவரும் படம், ஆர்ஆர்ஆர். சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. ஒருவர் இந்து, இன்னொருவர் முஸ்லீம். இருவரையும் சூப்பர்ஹீரோக்கள் ரேஞ்சுக்கு ராஜமௌலி காட்சிப்படுத்தியிருக்கிறார்.

2018 இல் தொடங்கப்பட்ட இந்தப் படம் 2021 ஜனவரி 8 வெளியாவதாக இருந்தது. கரோனா முதல் அலையில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால் 2021 அக்டோபர் 13 க்கு வெளியீட்டு தேதியை மாற்றினர். கரோனா இரண்டாம் அலை அதை மாற்றி எழுதியது. இப்போது 2022 கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மே 20 அதற்கான அறிவிப்பை தெலுங்கு திரையுலகம் எதிர்பார்க்கிறது. காரணம் மே 20 ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாள். அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு.

Also read... திரையரங்கு வருவாய் பூஜ்ஜியம் - 40 கோடியை விட்டுத் தந்த சல்மான் கான்!

மார்ச் 27 ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டரை ராஜமௌலி வெளியிட்டார். மே 20 ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளுக்கும் அப்படியொரு போஸ்டரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். படம் பிறகு வரட்டும், முதல்ல போஸ்டரை கண்ணுல காட்டுங்க என்கிறார்கள் ரசிகர்கள்.

ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். கீரவாணி இசை. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கை கவனிக்கிறார். இந்தியாவில் ஐந்து மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: