ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதிக்கு முன்பாகவே சசிகுமார் - ராஜ்கிரணுடன் கூட்டணி அமைத்த பொன்ராம்!

விஜய் சேதுபதிக்கு முன்பாகவே சசிகுமார் - ராஜ்கிரணுடன் கூட்டணி அமைத்த பொன்ராம்!

நடிகர் சசிகுமார்

நடிகர் சசிகுமார்

சீமராஜா படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என்று தகவல் வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பொன்ராம் இயக்கும் படத்தில் சசிகுமார் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சீமராஜா படத்தை அடுத்து இயக்குநர் பொன்ராம் அடுத்த கதையை தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் நடிக்க விஜய்சேதுபதி சம்மதம் தெரிவித்தார். அதேவேளையில் பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க 2020-ம் ஆண்டில் விஜய் சேதுபதி தேதிகளை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்தகதையை நடிகர் சசிகுமார் மற்றும் ராஜ் கிரணிடம் தெரிவித்த பொன்ராமுக்கு இருவரின் சம்மதமும் கிடைத்தது. தற்போது படத்தின் பட்ஜெட் மற்றும் தயாரிப்பாளரை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளார் பொன்ராம். அதனால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படம் வெளிவரும் எனத் தெரிகிறது.

சிபிஐ-க்கு மாறுகிறதா நடிகை சந்தியா கொலை வழக்கு? - வீடியோ

First published:

Tags: Actor Sasikumar