Home /News /entertainment /

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது - இயக்குநர் பாண்டிராஜ்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது - இயக்குநர் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ்

‘இந்தியன் 2’ படத்தின் விபத்து சம்பவம் அனைவருக்கும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட வந்த பசங்க இயக்குநர் பாண்டிராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “தஞ்சை சார்ந்த டெல்டா மாவட்டங்களை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. டெல்டா பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் விவசாயம் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் இதுபோன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது” என்றார்.

மேலும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதும் போதிய பாதுகாப்போடு தான் படம் எடுக்கப்படுகிறது. தற்போதைய 'இந்தியன் 2' திரைப்படத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இந்தத் திரைப்படம் மட்டுமல்ல மற்ற சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன அசாம்பாவிதங்கள் நடந்துள்ளது. அது யாருடைய அஜாக்கிரதையாலும் நடந்ததல்ல, அது எங்களின் பாதுகாப்பை மீறி நடப்பவை. தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்த விபத்து சம்பவம் மேலும் பாதுகாப்போடு பணியாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைவருக்கும்  ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும் படிக்க: முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க ஆசைப்பட்ட அமிதாப் பச்சன்!
Published by:Sheik Hanifah
First published:

அடுத்த செய்தி