• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த பா.ரஞ்சித்

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் உடன் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம்

பா.ரஞ்சித் உடன் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கிறார்.

  • Share this:
தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே தயாரிப்பிலும் வெற்றி கண்ட பா.ரஞ்சித் அடுத்ததாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தை தயாரித்தார். அதியன் ஆதிரை இயக்கியிருந்த அத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குநர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குநர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ‘ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.



ஆதித்ய வர்மா திரைப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடிக்கிறார் துருவ் விக்ரம். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: