முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பா.ரஞ்சித்தின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

பா.ரஞ்சித்தின் அடுத்த படம்: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களில் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சமூக செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வரும் பா.ரஞ்சித்தின் கருத்துகளும், செயல்பாடுகளும் அரசியல் அரங்கிலும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவரது சொந்த தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியைப் பேசியது. அதேவேளையில் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் அட்டகத்தி ஹீரோ தினேஷை நாயகனாக வைத்து பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் இரண்டாவது பட அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களில் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க மெட்ராஸ், கபாலி படங்களில் நடித்து கவனம் பெற்ற ரித்விகா இணைந்து நடிக்கிறார். முனிஸ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. படப்பிடிப்பை இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாண்டிச்சேரி, விழுப்புரம் பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சபரிமலையில் 2 பெண்களும் நுழைந்தது எப்படி? - வீடியோ

First published:

Tags: Pa. ranjith, Pariyerum perumal