தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்த இயக்குநர் பா. ரஞ்சித்தின் 38-வது பிறந்தநாள் இன்று..

தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்த இயக்குநர் பா. ரஞ்சித்தின் 38-வது பிறந்தநாள் இன்று..

பா. ரஞ்சித்

தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்த இயக்குனர் ரஞ்சித்தின் 38வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

 • Share this:
  கலையின் வாயிலாக அறிவாயுதம் ஏந்தி மக்களுக்காக தேவைகளை உரிமைகளை படைப்புகளாக மாற்றும் இயக்குநர்கள் வெகுசிலரே. அதில் மிக முக்கியமான இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் ரஞ்சித்.  தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சென்னை-28 திரைப்படத்தில் பணியாற்றியவர். விளையாட்டுத்தனமாக திரைப்படங்களை இயக்கும் வெங்கட்பிரபு பட்டறையில் இருந்து வெளிவரும் இயக்குனர்கள் விளையாட்டாய் திரைப்படம் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை உடைத்து அட்டகத்தி திரைப்படத்தில் தலித் அரசியலை அப்பட்டமாக பேசியிருந்தார் ரஞ்சித்.

  ஆடிப்போனால் ஆவணி  ரூட் தலையாக இளைஞர்களை கவர்ந்தாலும் அட்டகத்தி படத்தின் மூலம் மாட்டுக்கறி உண்ணும் காட்சிகளை முதல்முறையாக படம் பிடித்த இயக்குனர் அடுத்ததாக இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவற்றை சுற்றி நடைபெறும் அரசியலை படமாக்கியதுடன் தலித் இளைஞர்களின் கல்வியின் அவசியம் குறித்தும் பேசியிருந்தார். கல்வி கற்காமல் இளைஞர்களை வன்முறை பாதைக்கு அழைத்துச்செல்லும் அரசியலை அப்பட்டமாக சொல்லியிருந்த மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றி ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படத்தினை இயக்க வாய்ப்பை பெற்றுத்தந்தது.  ரஜினிகாந்தை முதல் முறையாக வயதான தோற்றத்தில் படம் முழுக்க நடிக்க வைத்த ரஞ்சித் மலேசியாவில் நடைபெறுவது போல கதை களத்தை அமைத்து வன்முறைக்கு எதிராக பேசி இருந்ததோடு, நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் கதை களத்தை அமைத்திருந்தார். முள்ளும் மலரும் திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்திற்கு சிறப்பாக நடிக்கும் வாய்ப்பை கபாலி ஏற்படுத்தி கொடுத்ததாக பலரும் இந்த திரைப்படத்தை பாராட்டினர்.

  மாயநதி இங்கு  மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு காலா திரைப்படத்தின் மூலம் மறுமுறை ரஞ்சித்துக்கு அமைய நிலம் எங்கள் உரிமை என்ற கொள்கையை உரக்க பேசினார் ரஞ்சித்.தொடர்ந்து வடசென்னை பாரம்பரிய குத்துச்சண்டை போட்டியை பரம்பரை என்ற பெயரில் படமாக்கி உள்ள ரஞ்சித், வடசென்னை மக்களின் தேவைகளையும் வாழ்க்கை முறையையும் தொடர்ந்து பேசி வருவதோடு தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படும் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

  இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக ரஞ்சித் தயாரித்து வெளியிட்ட பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வு களுக்கு எதிராக உரக்கப் பேசியது, இதேபோல ரஞ்சித் தயாரித்த மற்றொரு திரைப்படமான இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உலக அமைதியையும் ஆயுதத்திற்கு எதிரான அகிம்சை வழியையும் போதித்தது.

  மரத்தை சுற்றி பாடல் பாடும் வழக்கமான தமிழ் சினிமாவிற்கு விடைகொடுத்து மண்ணின் மணம் மாறாமல் குறிப்பிட்ட மக்களின் கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குனர் ரஞ்சித், தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: