முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக பிரபல நடிகரா?

சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக பிரபல நடிகரா?

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த்

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த்

  • Last Updated :

சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் ஆசை இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் பி.வாசு சமீபத்தில் சந்திரமுகி 2-ம் பாகம் குறித்து அளித்த பேட்டியில், “சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தை நான் ஏற்கெனவே கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்தப் படம் அங்கு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

இந்தப் படத்தின் கதையை இன்னும் மெருகேற்றி ஒரு தமிழ் ஹீரோவிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம். முதற்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறவில்லை. ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் யார் என்ற கேள்வி எழுகிறது.

top videos

    மேலும் படிக்க: தர்பார் முதல்நாள் சிறப்பு காட்சிக்கு சிக்கல் - காவல் ஆணையரிடம் புகார்!

    First published:

    Tags: Chandramukhi