இந்த நாள் இனிய நாளே!- பாரதிராஜாவை சந்தித்த நவீன் நெகிழ்ச்சி பதிவு..

நவீன் - பாரதிராஜா

மூடர்கூடம் நவீன் தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்புகாக தங்கியுள்ளார்.அப்போது எதர்ச்சியாக பாரதிராஜாவை சந்தித்தது குறித்து இயக்குனர் நவீன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி தெலுங்கு, தமிழ், மலையாளப் படங்களின் ஆபத்பாந்தவனாக மாறி பல வருடங்கள் ஆகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த அரசுக்கு பெருந்தொகை கட்டணமாக தர வேண்டும். 2011 இல் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின் இப்படியொரு கட்டண உயர்வை கொண்டு வந்தார். அத்துடன் போலீஸ் தொந்தரவு. ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம்வரை போலீசுக்கு கட்டிங் தர வேண்டும். ஆந்திரா, தெலுங்கானாவில் படப்பிடிப்பு நடத்த கட்டணம் குறைவு. கெடுபிடிகளும் குறைவு.

  ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்குள் போனால், ஒரு படத்தை எடுத்து முடித்து சத்தமில்லாமல் வெளியே வரலாம். அதற்கான எல்லா வசதிகளும் அங்குள்ளது. தெலுங்குக்கு இணையாக திரைப்படங்கள் தயாரிக்கும் தமிழ்நாட்டில் அப்படியொரு ஃபிலிம் சிட்டி இல்லாதது பெருங்குறை.

  நம் விஷயத்துக்கு வருவோம். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு தமிழ் சினிமா ஹைதராபாத்தில் தஞ்சமடைந்தது. முக்கால்வாசி படப்பிடிப்புகள் அங்குதான் நடக்கின்றன. இயக்குனர் நவீன் தனது அக்னி சிறகுகள் படப்பிடிப்புக்காக ஒரு மாத காலமாக அங்கு தங்கியிருக்கிறார்

  Also Read: ‘கொடி பறக்குதா’ அதிக ஃபாலோயர்கள் கொண்ட தமிழ் நடிகர்; சாதனை படைத்த தனுஷ்!

  ஜுலை 17 பாரதிராஜாவின் பிறந்தநாள். அன்று ஹோட்டல் அறையைவிட்டு லாபிக்கு வந்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி. எதிரில் பாரதிராஜா, அவரும் படப்பிடிப்புக்காக அங்கு தங்கியிருந்திருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து நவீன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்


  "ஒரு மாசமா ஹைதராபாத் ட்ரைடண்ட் ஹோட்டல்லதான் இருக்கேன். தமிழ் சினிமாவே இங்கதான் இருக்கு. அத்தனை தெரிஞ்ச முகங்கள். ஆனா, இன்னைக்கு காலையில சாப்பிட்டு லாபி வழியா வந்தா தெய்வதரிசனம். பாரதிராஜா அய்யாகிட்ட அக்னி சிறகுகள் கிளைமாக்ஸ் காட்டுனேன். மிரட்சி என்றார். இந்த நாள் இனிய நாளே!" என குறிப்பிட்டுள்ளார்.

  நவீனின் செய்தியிலிருந்து மூன்று தகவல்கள். மொத்த தமிழ் சினிமாவும் ஹைதராபாத்தில்தான் உள்ளது. படப்பிடிப்புக்காக பாரதிராஜாவும் அங்குதான் உள்ளார். நவீனின் அக்னி சிறகுகள் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: