இயக்குனர் நவீன் கடவுள் விமர்சனம் - பின்னணி என்ன?

இயக்குனர் நவீன்

மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் கடவுள், மதம் குறித்து கூறிய கருத்துக்களை, சர்ச்சைக் கருத்து என நேற்று சிலர் விமர்சித்து, அதனை பரபரப்பாக்கினர்.

 • Share this:
  நவீன் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். நவீன் முகமது அலி என்பது அவர் பெயர். ஆனால், கடவுள் மறுப்பாளர். நாத்திகவாதி. முற்போக்குக் கருத்துக்களை இணையதளத்தில் தொடர்ச்சியாக முன் வைப்பவர். பெண்கள் விரும்பியே புர்கா அணிகிறார்கள் என்பது போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்துக்களை விமர்சித்து உண்மையை முன்வைப்பவர்.

  அப்படிப்பட்ட அவரது கருத்துக்கு பதிலளித்த ஒருவர், தம்பி உங்களைவிட பழுத்த நாத்திகர்கள் பெரியார்தாசன், முரசொலி அடியார் அவர்களே பல கேள்விக்ளுக்கு விடை தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றது வரலாறு. அடியாரின் 'நான் காதலிக்கும் இஸ்லாம்' படித்தால் நாத்திகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

  அதற்கு பதிலளித்த நவீன், "நீங்கள் அறிவியலும், வரலாறும் படித்தாலே போதும். இப்போதுள்ள கடவுள்களும் மதங்களும் இந்த பூமி தோன்றுவதற்கு காரணமல்ல என்பது விளங்கும். வரலாறை குரானிலும், பைபிளிலும், புராணங்களிலும் தேடக் கூடாது" என்று பதிலளித்திருந்தார்.

  அறிவியல்பூர்வமாக எத்தனையோ அறிஞர்கள் கூறியதையே நவீனும் கூறியிருந்தார். நவீன் என்ற அவரது பெயரை நவீன் முகமது அலி என்று இஸ்லாமிய அடையாளத்துடன், அவரது இறை மறுப்பு, மத மறுப்பு கருத்துக்களை வெளியிட்டால் ஒரு மைலேஜ் கிடைக்கும் என நினைத்தவர்கள் இந்த சாதாரண விஷயத்தை சர்ச்சை, பரபரப்பு என்று பற்ற வைத்தனர். அவர்கள் நினைத்தது நடக்காமல் போனதுதான் வேடிக்கை.

      

      

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: