ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனக்கு ஷூ மாட்டி விட்ட உதவியாளருக்கு நன்றிக் கடன் செலுத்திய மிஷ்கின்!

தனக்கு ஷூ மாட்டி விட்ட உதவியாளருக்கு நன்றிக் கடன் செலுத்திய மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கினிடம் ஐந்து ஆண்டுகள் உதவியாளராக இருந்தவருக்கு நன்றிக்கடனாக சைக்கோ படத்தில் வில்லன் வாய்ப்பு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சைக்கோ படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மிஷ்கின் மனம் திறந்துள்ளார். 

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் ஜனவரி 24-ம் தேதி வெளியான படம் ‘சைக்கோ’. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படக்குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், மிஷ்கின், நித்யா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின், இந்த வெற்றியை இளையராஜாவிற்கு அர்ப்பணிக்கிறேன். செந்தூரப் பூவே, நிழல்கள் போன்ற படங்கள்தான் நான் சினிமாவிற்குள் வரக் காரணம். எனக்கு தாயாகவும் தந்தையாகவும் இளையராவை நினைக்கிறேன். அதேபோல் என் தாய் வயிற்றில் பிறந்த இன்னொரு தம்பியாகவே உதயநிதியைப் பார்க்கிறேன். என்னைக் காட்டிலும் என் படங்களை அதிகம் நேசித்தார். சிறந்த பண்பாளர் அவர். பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் படப்பிடிப்பில் உதய் என்றுதான் அவரை அழைப்பேன்.

சைக்கோ 2 படம் பற்றி உதயநிதி பேசினார். என் வாழ்நாளில் உதயநிதி எப்போது வந்து கேட்டாலும் அவருக்காக படமெடுக்க நான் தயாராக இருக்கிறேன். நித்யா மேனன் எனக்குத் தங்கை போல கிடைத்தவர். என்னை முழுவதும் புரிந்து கொண்ட நடிகை அவர். மலை, மழை மீது நம்பிக்கை வைத்து நான் படத்தை எடுத்தேன். படத்தில் 3000 அடி உயரத்தில் இருந்து விழும் காட்சியெல்லாம் உண்மையாக எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள், சிறந்த கதையோ படமோ இல்லை, ஒருவகையான முயற்சிதான் இது. அதில் சில தவறுகள் இருப்பது இயல்புதான். எனது படங்கள் கத்தி மேல் நடப்பது போல, எனக்கு 73 வது தொழில் சினிமா. வன்மமாக தோன்றினாலும் அன்பைத்தான் நான் கூறியிருக்கிறேன். நான் புரட்டியுள்ள பெரும்பாறையின் கீழே பூக்களும், நீர் ஊற்றும் கூட உண்டு.

ஐந்து ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க எனக்கு பணிவிடை செய்து வந்தவர் ராஜ் குமார். என் கண் அசைவை பார்த்து நான் என்ன நினைக்கிறேனோ அதை அடுத்த நொடியே செய்து தரக்கூடிய ஒரு உதவியாளர். காபி வேண்டும் என்று நான் நினைத்தால் என் நினைப்பை உடனே புரிந்து கொண்டு காபி போட்டு தருவான். கையை நீட்டினால் செல்போன் தேவை என்று அவனை தெரிந்துகொண்டு செல்போனை எடுத்து தருவான். நான் வெளியே புறப்படத் தயாரானால் எனக்கு ஷூ மாட்டி விடுவதில் தொடங்கி அத்தனை பணிவிடைகளையும் செய்து வந்தார். நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.

அவருக்கு ஏதாவது நன்றிக்கடனாக திருப்பி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். பணமாகக் கொடுத்தால் அது சரியாக இருக்காது எனவே என் மனமாக அவருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை சைக்கோ படத்தில் கொடுப்பது என்று தீர்மானித்தேன். அந்த அடிப்படையில்தான் சைக்கோ படத்தில் வரும் சைக்கோ கேரக்டர் வாய்ப்பு கொடுத்தேன். அதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். என் காலம் முழுக்க ராஜ்குமாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மேலும் படிக்க: முன்னாள் காதலருடன் பார்ட்டி... ஷனம் ஷெட்டியை விலகக் காரணம் என்ன? - தர்ஷன் அதிரடி பேட்டி

Published by:Sheik Hanifah
First published:

Tags: Mysskin