ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு தொடக்கம்

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு தொடக்கம்

பிசாசு 2 பட பூஜை

பிசாசு 2 பட பூஜை

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிசாசு’. நாகா, ராதாரவி, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

தற்போது இந்தப் படத்தின் 2-ஆம் பாகம் உருவாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஆன்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கின் - கார்த்திக் ராஜா கூட்டணி இணையும் முதல் படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

இன்று ‘பிசாசு 2’ பட வேலைகள் இனிதே பூஜையுடன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து படத்திற்காக பிரமாண்டமான செட் வேலைகள் திண்டுகல்லில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பிரபல லண்டனைச் சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். மேலும் சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணா இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கெனவே பிசாசு திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்திருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. முன்னதாக பிசாசு பட டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக இயக்குநர் பாலாவுக்கு மிஷ்கின் நன்றி தெரிவித்திருந்தார்.

உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

Published by:Sheik Hanifah
First published:

Tags: Director mysskin, Kollywood