பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி 66-வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருதை வென்ற படம் ‘பாரம்’. இந்தப் படத்தை வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
நேற்று வெளியான இத்திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற போது அதில் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மிஷ்கின், “நான் இயக்கிய சைக்கோ எல்லாம் ஒரு படமா. பாரம் மிகச்சிறந்த படம். படத்தை விளம்பரப்படுத்த போஸ்டர் அடிக்க பணம் இல்லை என்றார்கள். எனது சொந்த செலவில் போஸ்டர் அடித்து ஒட்டி நானே இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.
தான் சொன்னதைப் போலவே பாரம் திரைப்படத்துக்கு போஸ்டர் அடித்து சென்னையின் சில பகுதிகளில் ஒட்டினார் இயக்குநர் மிஷ்கின். அவரது இச்செயலுக்கு பாரம் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.