Home /News /entertainment /

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்?

மாரி செல்வராஜ், துருவ் விக்ரம்

மாரி செல்வராஜ், துருவ் விக்ரம்

மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷின் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழு தற்போது 90 சதவிகித படப்பிடிப்பை முடித்திருப்பதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து விடும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கர்ணன் படத்துக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரமை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்த துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பது உறுதியானால் அந்தப் படம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 101 வயது ரசிகையின் கனவை நிறைவேற்றிய விஜயகாந்த்!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Dhruv Vikram

அடுத்த செய்தி