இயக்குநர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை!

இயக்குநர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை!

குழந்தையுடன் மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்.

 • Share this:
  இயக்குநர் மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

  இயக்குநர் ராமிடம் உதவியாளராக இருந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கதிர், ஆனந்தி நடித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ‘கர்ணன்’ படத்தை இயக்கியிருக்கிறார். இதில் தனுஷ், லால் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் ‘கர்ணன்’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் தெறி ஹிட்டாகியிருக்கிறது. கர்ணன் படத்தைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்.

  இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவுக்கு வளைகாப்பு நடந்தது. அந்தப் படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது இந்தத் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கையில் குழந்தையை வைத்திருக்கும் மாரி செல்வராஜின் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தவிர இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: