செக்கச் சிவந்த வானம்... ரெட்லைட் ஏரியா... மணிரத்னம்... வெடிகுண்டு மிரட்டல்!

செக்கச் சிவந்த வானம்... ரெட்லைட் ஏரியா... மணிரத்னம்... வெடிகுண்டு மிரட்டல்!
இயக்குநர் மணிரத்னம்
  • News18
  • Last Updated: October 2, 2018, 2:22 PM IST
  • Share this:
இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படம் கடந்த 27-ம் தேதி வெளியாகி 5 நாட்களாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் பாண்டிச்சேரியில் சிவப்பு விளக்கு பகுதி இருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சியைக் கண்டித்தும், அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கரன் என்பவர் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.


இது தொடர்பாக பாலன், தனசேகர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலைத் தொடர்ந்து மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ALSO WATCH...

First published: October 2, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்