Home /News /entertainment /

’தெறி’ படத்தில் வில்லனாக நடித்தது ஏன்? - கூச்சத்துடன் மகேந்திரன் கொடுத்த விளக்கம்

’தெறி’ படத்தில் வில்லனாக நடித்தது ஏன்? - கூச்சத்துடன் மகேந்திரன் கொடுத்த விளக்கம்

மகேந்திரனுடன் விஜய்

மகேந்திரனுடன் விஜய்

"நடிகர் விஜய் தன்னிடமுள்ள உயரத்தை படப்பிடிப்பின் போது செட்டில் காண்பித்துக் கொள்ள மாட்டார். அற்புதமான மனிதர். " மகேந்திரன்

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 79.

    முள்ளும் மலரும், உதுரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி உள்ளிட்ட முக்கியமான தமிழ்ப்படங்களை இயக்கிய மகேந்திரன், 2006-ம் ஆண்டில் தனது கடைசிப் படமாக சாசனம் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து தெறி, சீதக்காதி, நிமிர், பேட்ட, உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

    மகேந்திரன் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலில் செலுத்தினர்.

    இயக்குநர் மகேந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக அறிமுகமான படம் தெறி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் மகேந்திரன்.

    படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மகேந்திரன், தயாரிப்பாளர் தாணு அலுவலகத்தில் இருந்து அழைத்திருந்தார்கள்.

    ஒரு உதவி வேண்டும் உங்கள் வீட்டுக்கு வரலாமா என்றார் தாணு. அவரிடம் தான் மற்றவர்கள் ஏதாவது உதவி கேட்டுப் போவார்கள். அதனால் நான் திகைத்துப் போய்விட்டேன். அவர் எதைக் கேட்டாலும் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். என்னைச் சந்தித்து இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு ஒரு கவித்துவமான காரணத்தைச் சொன்னார்.

    பார்க்க.... இளம்தலைமுறை இயக்குனர்களின் ஆதர்ச நாயகனுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!



    இதைச் சொல்ல எனக்குக் கூச்சமாக உள்ளது. அவர் என்ன சொன்னார் என்றால் உங்கள் படங்களில் உலகத்தைக் காட்டினீர்கள். நாங்கள் உலகத்துக்கு உங்களைக் காண்பிக்க ஆசைப்படுகிறோம் என்றார்.

    நான் உடனடியாக அவரிடம் கேட்ட வார்த்தை இது மிஸ்டர் விஜய்க்கு தெரியுமா என்றேன். அவருக்கு முழு சந்தோஷம் அவருடைய சம்மதத்துடன் தான் உங்களை சந்திக்க வந்தேன் என்றார். நான் க்ளீன் போல்ட் ஆகிட்டேன். நான் மிக மிக மதிக்கும் கலைஞன் விஜய். அவருடைய பண்பு, அவர் பழகும் விதம் கேள்விப்பட்டு அவர்மீது எனக்கு அன்பு உண்டு. பிறகு என்னால் மறுக்க முடியவில்லை.

    படிக்க... மகேந்திரன் கடந்து வந்த பாதையும்... எம்.ஜி.ஆரின் உதவியும்!



    எனக்கு நடிக்கக் கூடிய சக்தி உள்ளதா, திறமை உள்ளதா எனத் தெரியவில்லை. ஒப்புக் கொண்டேன். அடுத்த நாள் அட்லீ என்னை சந்தித்து கதை சொன்னார். அவரிடமும் கேட்டேன் நான் நடிப்பது விஜய்க்கு தெரியுமா என்று கேட்டேன். அவரும் விஜய்க்கு நீங்கள் நடிப்பது மிகவும் சந்தோஷம் என்றார்.

    நடிகர் விஜய் தன்னிடமுள்ள உயரத்தை படப்பிடிப்பின் போது செட்டில் காண்பித்துக் கொள்ள மாட்டார். அற்புதமான மனிதர். நல்ல மனிதனாக இருந்தால் மட்டுமே இந்த உயரத்தை அடையமுடியும். இவ்வளவு காலத்துக்குப் பின்னர் நான் நடிக்கும் முதல் படம் விஜய்யுடன் அமைந்துள்ளது. நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என்றார்.

    ‘உதிர்ந்த பூ’ தமிழ் திரையுலகின் ஆசான் மகேந்திரன்



    ஐ.பி.எல் தகவல்கள்...

    POINTS TABLE:


    SCHEDULE TIME TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director mahendran

    அடுத்த செய்தி