• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஷூட்டிங்கில் இருந்தாலும் ரஜினிக்கு கவனம் முழுவதும் அரசியலில் தான்!

ஷூட்டிங்கில் இருந்தாலும் ரஜினிக்கு கவனம் முழுவதும் அரசியலில் தான்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் உடல் மொழியும், ஸ்டைலும் மகேந்திரனிடம் இருந்து வந்ததுதான். அவர் முள்ளும் மலரும் திரைப்படத்தின்போது சொல்லிக் கொடுத்தவற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட ரஜினி, பின்னாளில் அதையே தனக்கான பாணியாகவும் மாற்றிக் கொண்டார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் உடல் மொழியும், ஸ்டைலும் மகேந்திரனிடம் இருந்து வந்ததுதான். அவர் முள்ளும் மலரும் திரைப்படத்தின்போது சொல்லிக் கொடுத்தவற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட ரஜினி, பின்னாளில் அதையே தனக்கான பாணியாகவும் மாற்றிக் கொண்டார்.

உத்திரபிரேதசம் மாநிலத்தில் பேட்ட திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தை இயக்குனர் மகேந்திரன் சந்தித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உத்திரபிரேதசம் மாநிலத்தில் பேட்ட திரைப்பட படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை இயக்குனர் மகேந்திரன் அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று சந்தித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து நடிகர் ரஜினிகாந்தும் மகேந்திரனும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக சென்னையில் நடைபெற்றது. இங்கு படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால், கடும் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் பாதுகாப்பை பல கட்டமாக பலப்படுத்தினர்.

    பேட்ட படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த இயக்குனர் மகேந்திரன்


    மேலும் தொடர்ந்து தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால்  ரசிகர்களின் இடையூறு இருக்கும் என கருதி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் படப்பிடிப்பை குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு சென்ற  இயக்குனர் மகேந்திரன் நடிகர் ரஜினி தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று சந்தித்தார். அப்போது தற்போதைய அரசியல் சூழல் குறித்து ரஜினிகாந்தும் மகேந்திரனும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பேட்ட படத்தில் இயக்குனர் மகேந்திரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ALSO WATCH...

    காட்சி மொழி கவிஞன் இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: