Home /News /entertainment /

விஜய் சேதுபதி படத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் ரஜினியின் ஃபேவரைட் இயக்குநர்!

விஜய் சேதுபதி படத்தில் நீதிபதியாக நடித்திருக்கும் ரஜினியின் ஃபேவரைட் இயக்குநர்!

நடிகர்  விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சீதக்காதி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சீதக்காதி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தான் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். கலைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கதைக்களமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பரசுராமன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் மௌலியும், லட்சுமி என்ற கேரக்டரில் நடிகை அர்ச்சனாவும் நடித்துள்ளனர். டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் அப்டேட்களை தினமும் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் படத்தில் நீதிபதியாக நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெர்சல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த இயக்குநர் மகேந்திரன், ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் நடித்து வருகிறார். இவர் ரஜினிக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆப்பிளுக்கு சவால்! ஐஃபோன்கள் திருடி தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்ற இளைஞர் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi, Seethakathi

    அடுத்த செய்தி