Home /News /entertainment /

தனுஷ் படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார்...!

தனுஷ் படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார்...!

தனுஷ்

தனுஷ்

இந்தப்படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ராட்சசன் புகழ் ராம்குமார் இணையும் "தயாரிப்பு எண் 35" படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
    மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்று தனுஷ் படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'விஸ்வாசம்' என்ற பெருமைக்குரிய தயாரிப்பின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அடுத்து தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது.

    "தயாரிப்பு எண் 34" என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் துவங்கியுள்ளது.

    தொடர்ந்து 30 நாட்கள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கொடி படத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இணையும் இரண்டாவது படம் இது.

    ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, இரட்டை இளம் இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் படத்திற்கு இசையமைக்கிறார்கள்.



    படம் குறித்து இயக்குநர் துரை செந்தில்குமார், ‘கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    எந்த ஒரு படத்தையும் மிகச்சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தும் சத்யஜோதி நிறுவனத்தின் தனித்துவம் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன், அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்’ என்று கூறியுள்ளார்.



    இந்தப்படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் ராட்சசன் புகழ் ராம்குமார் இணையும் "தயாரிப்பு எண் 35" படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Dhanush

    அடுத்த செய்தி