Jagame Thandhiram: ஜகமே தந்திரத்தில் ஜோஜு ஜார்ஜ் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

ஜோஜு ஜார்ஜ்

ஜகமே தந்திரத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. ஒன்று, பிறமொழிக் கலைஞர்கள். ஹாலிவுட் நடிகர் முதல் மலையாள நடிகர்கள்வரை இடம்பெற்றிருக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜகமே தந்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கமளித்துள்ளார்.

ஜுன் 18 ஜகமே தந்திரம் வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் பல வருடங்களாக எடுக்க நினைத்த படம். அயல் மண்ணில் கேங்ஸ்டராக தனுஷ் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் படம். திரையரங்கில் திருவிழா கொண்டாட்டத்துடன் வெளியாகியிருக்க வேண்டிய ஜகமே தந்திரம், வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. தனுஷை போலவே ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேறு வழியில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜகமே தந்திரத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. ஒன்று, பிறமொழிக் கலைஞர்கள். ஹாலிவுட் நடிகர் முதல் மலையாள நடிகர்கள்வரை இடம்பெற்றிருக்கிறார்கள். மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முல்முறையாக தமிழ்ப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். 1995 இல் ஜுனியர் ஆர்டிஸ்டாக மழவில்கூடாரம் படத்தில் ஜோஜு ஜார்ஜ் தலைக்காட்டினார்.

அதன் பிறகு பல வருடங்கள் வெறும் தலையை காட்டுவதிலேயே கழிந்தது. பிறகு சின்னச் சின்ன வசனக்காட்சிகள் கிடைத்தன. விடுமுறைக்கு வரும் ராணுவ வீரன், போலீஸ்காரர் இப்படி. மம்முட்டியின் ராஜாதிராஜாவில் குறிப்பிடத்தகுந்த வேடம். இன்று அவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அந்தப் படமே முன்னோட்டமாக அமைந்தது. எனினும், தனித்து தெரியத் தொடங்கியது ஜோசப் படத்தில். இதில் ஜோஜு ஜார்ஜ் நாயகன். படம் வெற்றிபெற, பல படங்களில் நாயகனாக நடித்தார். சமீபத்தில் வெளியான நாயாட்டு திரைப்படத்திலும் அவர்தான் ஏறக்குறைய கதாநாயகன்

ஜகமே தந்திரத்தில் இவரை நடிக்க வைக்கும் எண்ணம் கார்த்திக் சுப்புராஜுக்கு இல்லை. அவர் அணுகியது எஸ்.ஜே.சூர்யாவை. அந்த நேரம் எஸ்.ஜே.சூர்யா பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் தர இயலவில்லை. அவரைவிட்டால் ஜோஜு ஜார்ஜே அந்த கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பார் என அவரை நடிக்க வைத்துள்ளார். படம் பார்த்த பிறகு இவரைவிட யார் சிறப்பாக நடிப்பார்கள் எனும் அளவுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை குறையில்லாமல் செய்துள்ளாராம் ஜோஜு ஜார்ஜ்ஜுன் 18 தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது. ஜோஜு ஜார்ஜ் ரசிகர்களுக்கும்தான்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: