ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

36 வருடங்களுக்குப் பின் ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு - பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார்..!

36 வருடங்களுக்குப் பின் ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு - பாக்யராஜ் இயக்கத்தில் சசிகுமார்..!

முந்தானை முடிச்சு | சசிகுமார்

முந்தானை முடிச்சு | சசிகுமார்

முந்தானை முடிச்சு ரீமேக்கில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிப் படமானது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படம் 36 வருடங்களுக்கு பின்னர் தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முந்தானை முடிச்சு ரீமேக்கில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். ஜே.எஸ்.பி. சதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Actor Sasikumar, Director Bhagyaraj