அருவா பட ஊதியத்தில் 25% விட்டுக்கொடுக்கிறேன்... இயக்குனர் ஹரி அறிவிப்பு!

தான் அடுத்ததாக இயக்கப்போகும் 'அருவா' படத்தில் 25 சதவீத ஊதியததை குறைத்துக்கொள்ளவதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

அருவா பட ஊதியத்தில் 25% விட்டுக்கொடுக்கிறேன்... இயக்குனர் ஹரி அறிவிப்பு!
இயக்குனர் ஹரி
  • Share this:
கொரோனா ஊரடங்கால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக பிரபல இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

சிங்கம், சாமி உள்ளிட்ட பட இயக்கியவர் இயக்குனர் ஹரி. சமீபத்தில் சூர்யாவின் 39-வது படமான ‘அருவா’ படத்தை இயக்க உள்ளார். ஊரடங்கால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் தனது சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக ஹரி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான் திரைத்துறை மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் என்பதை கருத்தில் கொண்டு, தான் அடுத்ததாக இயக்கப்போகும் 'அருவா' படத்தில் 25 சதவீத ஊதியததை குறைத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.ஏற்கெனவே நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீததை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.


Also see...
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading