முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’ஆரியின் கடின உழைப்பு, பாலாவின் ஈஸி கோயிங்!’ புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்

’ஆரியின் கடின உழைப்பு, பாலாவின் ஈஸி கோயிங்!’ புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்

பிக் பாஸ் இறுதிப் போட்டி

பிக் பாஸ் இறுதிப் போட்டி

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ந்து 6 மணி நேரம் விஜய் டிவியிலும், ஹாட் ஸ்டார் ஆப்பிலும் ஒளிபரப்பானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக் பாஸ் இறுதிப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ஆரி மற்றும் பாலாவை வாழ்த்தியிருக்கிறார், இயக்குநர், நடிகர் மற்றும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சேரன்.

100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று பிரமாண்டமாக நடந்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ந்து 6 மணி நேரம் விஜய் டிவியிலும், ஹாட் ஸ்டார் ஆப்பிலும் ஒளிபரப்பானது.

ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, சோம் என 5 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில், மக்களின் பேராதரவோடு பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் ஆரி. அவருக்கு வெற்றி கோப்பையுடன், 50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. பாலா பிக் பாஸ் தமிழ் 4-ன் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்கள் இருவரையும் வாழ்த்தி, ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் இயக்குநரும், நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சேரன். அதில், ”ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி. ஒவ்வொரு சமூகப் பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. உங்களின் வெற்றியால் ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான்.. வாழ்த்துக்கள் ஆரி அர்ஜுனன்” என ஆரிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அடுத்த பதிவில், ”BB-ல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மை முகமும் எதையும் சுலபமாக கடந்து சென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விரு பதிவுகளும் ஆரி, பாலா ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Aari Arjunan, Balaji murugadoss, Bigg Boss, Director cheran