கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைபிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். அதில் இயக்குநர் சேரனும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் சமீபத்தில் விஜய் படத்தை இயக்காமல் போனது குறித்த சீக்ரெட்டை வெளியிட்டார்.
அதேபோல் தமிழகத்தில் அதிகரிக்கும் மின் கட்டணம் குறித்தும் தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு, “அருணாச்சலம்"(1997) படத்தின் 202வது நாள் வெற்றிவிழா மேடையில் இயக்குனர் சேரனை 'பொற்காலம்'(1997) படம் கொடுத்ததற்க்காக மேடையில் அழைத்து தங்கச்சங்கிலி பரிசாக அணிவித்து அவரை கவுரவித்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
உடல் ஊனமுற்றவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும்' என்ற கருத்தை அழகாக சொல்லியிருந்த இயக்குனர் சேரனை இந்த மேடையில் வாழ்த்த ஆசைபடுகிறேன்' என்று கூறி பொற்காலம் பட டைரக்டர் சேரனை அழைத்தா் ரஜினிகாந்த் . இப்படி கூறியதை கேட்டு ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ச்சியாக மேடை ஏறி பரிசு பெற்றார் சேரன்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திருக்கும் இயக்குநர் சேரனுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை இருவரின் பிறந்தநாளும் டிசம்பர் 12 ஆகும்” என்று பதிவிட்டிருந்தார்.
மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்.. https://t.co/2AIh0JTLTk
ரசிகரின் இந்த பதிவுக்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் சேரன், “மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார் நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்.
அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர, நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது.. காரணம் அந்த மனிதத்தன்மை” என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.