கையில் மையுடன் சின்மயி... கலாய்த்து தள்ளிய பிரபல இயக்குநர்

சின்மயி

  • News18
  • Last Updated :
  • Share this:
பின்னணி பாடகி சின்மயி பதிவிட்ட புகைப்படத்தை கிண்டலடித்துள்ளார் தமிழ்ப்படம் இயக்குநர் அமுதன்.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது.

இன்று காலை முதலே திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். திரைநட்சத்திரங்கள் பலரும் வாக்களித்த பின்னர் கையில் மையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வாறு பாடகி சின்மயி தான் வாக்களித்த பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு “கடவுள் தான் நாட்டைக் காப்பாற்றுவார்” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன், சின்மயி அணிந்திருந்த கண்ணாடியை கலாய்த்துள்ளார்.அதில், இந்த கண்ணாடியை மீண்டும் எப்படி காரில் பொருத்துவீர்கள் என்று கிண்டலடித்துள்ளார்.

வீடியோ: கையில் மையுடன் சின்மயி... கலாய்த்து தள்ளிய பிரபல இயக்குநர்ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள்!

Published by:Sheik Hanifah
First published: