Home /News /entertainment /

இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா!

இயக்குநர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா!

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
    தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

    “கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்.

    ஒரு மூத்த இயக்குநராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்காலத்துக்கும் எனது வழிகாட்டுதலும், பேரன்பும் என்றும் தொடரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 14-ஆம் தேதி இயக்குநர் சங்கத் தேர்தல் நடக்க உள்ளது.

    2,700 உறுப்பினர்கள் உள்ள இயக்குனர் சங்கத்திற்கு தலைவர் பதவியை தவிர்த்து பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கான வேட்பு மனு கடந்த ஜீன் 26 -ம் தேதி முதல் வழங்கப்பட்டது.

    வேட்பு மனுக்களை பெற்றவர்கள் 27 மற்றும் 28 -ம் தேதி பூர்த்தி செய்த வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி இன்று மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

    வேட்புமனு பரிசீலனை 29-ம் தேதி வரை நடைபெறும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 30-ம் தேதி அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை ஒன்று மற்றும் இரண்டாம் தேதிக்குள் திரும்ப பெறலாம்.

    இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு ஜூலை 14-ம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.

    துணை தலைவர் 2, பொதுச் செயலாளர், பொருளாளர், 4 இணைச் செயலாளர், 15 செயற்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Director bharathiraja

    அடுத்த செய்தி