Home /News /entertainment /

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் வில்லனாகிறாரா பாரதிராஜா - படக்குழு விளக்கம்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் வில்லனாகிறாரா பாரதிராஜா - படக்குழு விளக்கம்

பாரதிராஜா | சிம்பு

பாரதிராஜா | சிம்பு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

    சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

    இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியானது.

    இந்தப் படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் நடிகர் சிம்பு. மே மாதம் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இடங்கள் இன்னும் இறுதியாகாததால் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜூன் 21-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.



    இந்நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விளக்கமளித்த படக்குழு, படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கேரக்டர் அல்ல என்று கூறியுள்ளது.

    ஏற்கெனவே அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சூர்யாவின் ஆயுத எழுத்து படத்தில் பாரதிராஜா அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    வீடியோ பார்க்க: விஜய் படத்தில் வில்லனாக நடித்தது ரொம்ப பிடித்திருந்தது - எஸ்.ஜே.சூர்யா!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Manadu, Simbu

    அடுத்த செய்தி