Home /News /entertainment /

வில்லன் அவதாரம் எடுத்த இயக்குநர் பாரதிராஜா!

வில்லன் அவதாரம் எடுத்த இயக்குநர் பாரதிராஜா!

பாரதிராஜா

பாரதிராஜா

தரமணி படத்தை அடுத்து நடிகர் வசந்த் ரவி நாயகனாக நடிக்கும் படம் ராக்கி. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

  • News18
  • Last Updated :
    ‘ராக்கி’ படத்தில் இயக்குநர் பாரதிராஜா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது.

    தரமணி படத்தை அடுத்து வசந்த் ரவி நாயகனாக நடிக்கும் படம் ராக்கி. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியநாடு , குரங்குபொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்த பாரதிராஜா, தற்போது வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



    பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை வைத்து என்ன பண்றது - டிடிவி தினகரன் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி